Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 19, 2012

தென் கொரியா மீது எதிர்வரும் வாரம் இராணுவ தாக்குதல் நடத்தப்படும்: வட கொரிய

தென் கொரியா மீது இரக்கமற்ற விதத்தில் இராணுவ தாக்குதலொன்றை எதிர்வரும் வாரம் மேற்கொள்ளப் போவதாக வட கொரிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட கொரிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறி, தற்போது தென் கொரியாவில் வசிக்கும் குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை எல்லைக்கு மேலாக பறக்க விடப்படும்
பலூன்களிலிருந்து பிரசார துண்
டுப் பிரசுரங்களை விழ விடுவதற்கான தமது திட்டத்தை முன்னெடுக்குமானால் மேற்படி தாக்குதல் ஆரம்பிக்கப்படும் என வட கொரிய மக்கள் இராணுவம் சூளுரைத்துள்ளது.

மேற்படி துண்டுப் பிரசுரங்களை விழ விடுவதற்கான சிறிய நகர்வொன்று அவதானிக்கப்படுமாயின் எதுவித எச்சரிக்கையுமின்றி, இரக்கமற்ற இராணுவத் தாக்குதலொன்று நடத்தப்படும் என வட கொரிய இராணுவம் கொரிய உத்தியோகபூர்வ முகவர் நிலையத்தினூடாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வட கொரிய அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறியவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 11.30 மணிக்கு பஜு நகருக்கு அண்மையிலுள்ள எல்லைப் பிராந்தியத்தில் தமது துண்டுப் பிரசரங்களை பலூன்களிலிருந்து விழ விடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய கொரிய கடல் எல்லைக்கு அருகிலுள்ள இரு வருடங்களக்கு முன் வட கொரியாவால் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்ட தீவொன்றுக்கு தென் கொரிய ஜனாதிபதி லீ மயுங் பாக் திடீர் விஜயம் மேற்கொண்டமைக்கு மறுநாள் வட கொரியாவால் இந்த தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. உண்மை ...சுமார் இரண்டு வாரம் தொடர் கிபீர் யூத்த விமானம் பைச்சி .....அசூர்சத்தம் தாங்க முடியவில்லை அப்பா ?

    ReplyDelete