மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட களிமடு கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன்
தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் குறிஞ்சாமுனை கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட களிமடு கிராமத்தில் 18 வயதுடைய மாணவியான காணிவேல் மோகனவதனா (வாவா) என்ற மாணவி கடந்த புதன் கிழமை வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபர்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
கண்ணன் குடா பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த மாணவியின் தந்தை நேற்று காலை 7 மணியளவில் வவுணதீவு பொலிஸில் முறைபாடு செய்ய சென்றபோது இரவு 9 மணிவரை காக்கவைத்து விசாரணை செய்துள்ளனர்.
இதன்பின்னர் பொலிஸார் மீது சந்தேகம் கொண்ட மாணவியின் தந்தை தன்னிடம் வந்து முறைப்பாடு செய்ததாவும் அரியநேத்திரன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment