Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 19, 2012

மட். மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களின் நிரந்தர நியமனத்தில் அரசியல் பாகுபாடு இல்லை – ஹிஸ்புல்லாஹ்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கும் விடயத்தில் எந்தவிதமான அரசியல் பாகுபாடு எதுவும் காட்டப்படவில்லை.

கட்டம் கட்டமாக பட்டதாரி பயிலுனர்கள் ஒவ்வொரு அமைச்சின் கீழும்
உள்வாங்கப்பட்டு அவர்களுக்கு நிரந்தர நியமன்ஙகள் வழங்கப்படும் என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகா
ர பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மண்முனை பிரதேச செயலக பிரிவிலுள்ள பட்டதாரி பயிலுனர்கள் சிலருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு கூறினார்.

நேற்று (18.10.2012) காலை மண்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள விதாதா நிலையத்தில் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நியமனங்கள் வழங்கும் வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பொருளதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பட்டதாரி பயிலுனர்களை ஆட்சேர்ப்பதற்கான நிகழ்ச்சித்திட்டத்திற்கமைவாக இன்று சில பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டு அவர்கள் பொருளதார அமைச்சின் கீழ் உள்வாங்கப்படுகின்றனர்.

இதே போன்று ஏனைய பட்டதாரி பயிலுனர்களும் அடுத்தடுத்த கட்டங்களில் ஒவ்வொரு அமைச்சின் கீழும் உள் வாங்கப்பட்டு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதையிட்டு எந்தவொரு பட்டதாரி பயிலுனரும் கவலையடையத்தேவையில்லை. அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, தொழில் அமைச்சு, எனது சிறுவர் மகளிர் விவகார அமைச்சு என இவ்வாறு பல அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரி பயிலுனர்கள் அனைவருமே உள்வாங்கப்பட்டு அவர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

அதில் முதற் கட்டமாகவே பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இந்த பட்டதாரி பயிலுனர்கள் உள்வாங்கப்பட்;டு அவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நிரந்தர நியமனம் பெறும் பட்டதாரிகள் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களையும் அபிவிருத்தி நடவடிக்கைகளை சரிவர செய்கின்றவர்களாக இருக்க வேண்டுமே தவிர அரசாங்க வேலைத்திட்டங்களை விமர்சிக்கின்றவாக்ளாக இருக்க கூடாது.
தனிப்பட்ட ஒவ்வாரு குடும்பங்களினது வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த இந்த நிரந்தர நியமனம் பெறும் பட்டதாரிகள் முயற்சிக்க வேண்டும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டங்களை கிராம மட்டத்தில் நடைமுறைப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

மதுபானம் பாவிப்பவர்களை மதுபான பாவனையிலிருந்து விடுபடச்செய்து அவர்களை சேமிப்பவர்களாகவும் பொருளதார ரீதியாக முன்னேற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட திட்மிடல் பணி;பபாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது இங்கு 36 பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை இன்று தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்துள்ள பத்திரிகை அறிக்கை ஒன்றில் பயிலுனர் நிரந்தர நியமங்களில் தமது கட்சி ஆதரவாளர்கள் என அறியப்பட்ட பலரின் பெயர்களை முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் நீக்கிவிட்டு நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளாத தமது ஆதரவாளர்களை அவ்விடங்களுக்கு நியமித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment