Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 19, 2012

கொழும்பு - கொம்பனித்தெரு இந்தியாவிற்கு!

கொழும்பு - கொம்பனித்தெருவில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான அனுமதி இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் கீழ் கொம்பனித்தெரு
அபிவிருத்திப் பணி திட்டங்கள் இந்திய டாடா ஹவுஸிங் டிவலொப்மென்ட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரரான எஸ்.ஜி.18 அட்வைசர்ஸ் என்டி
 கன்சல்டன் நிறுவனம் ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

99 வருடங்கள் குத்தகை அடிப்படையில் கொம்பனித்தெரு அபிவிருத்தித் திட்டம் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு வீடுகள், வர்த்தகத் தொகுதிகள் என்பன இங்கு அமைக்கப்படவுள்ளன.

இத்திட்டத்திற்கென 8 ஏக்கர் நிலப்பரப்பு அரசுமயப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் 456 குடும்பங்கள் வசித்ததாகவும் அவர்களுக்கு அப்பகுதியிலேயே சிறந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மக்களுக்கான வீடுகள் அமைக்க 2 வருடங்கள் செல்லும் எனவும் அதுவரை பிரதேச மக்கள் வேறு இடத்தில் தங்கவும் அவர்களுக்கான மாதாந்த வீட்டுக் கூலியை வழங்கவும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு அம்மக்களின் இணக்கமும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு 5.874 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment