ஐக்கிய இராச்சியத்துக்கான நுழைவிசைவைப் பெறுவதற்கு விரும்புகின்ற விண்ணப்பதாரிகள் போலி முகவர்களால் தவறாக வழிநடாத்தப்படுகின்ற அபாயம் குறித்து ஐக்கிய இராச்சிய எல்லை முகவரமைப்பு நிறுவனம் அறிவுறுத்துவதற்கு விரும்புகின்றது. அத்தோடு,
அத்தகைய போலி முகவர்களுக்கு எதிராக அது நடவடிக்கைகளை எடுக்குமெனவும் அவர்களை எச்சரிக்கின்றது.
ஐ

க்கிய இராச்சிய எல்லை முகவரமைப்பு நிறுவனத்தின் பிராந்தியப் பணிப்பாளர், தோமஸ் கிரெய்க் கூறுகையில்:
´நேர்மையான சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பணியாட்களை நாம் வரவேற்பதுடன் நேர்மையான விண்ணப்பதாரிகளுக்கு கிடைக்கும் நுழைவிசைவுச் சேவைகளின் தரங்களை உறுதிப்படுத்துவதற்கும் நாம் பற்றுறுதி கொண்டுள்ளோம். எவ்வாறாயினும், ஐக்கிய இராச்சிய நுழைவிசைவு முறைமை துஷ்பிரயோகிக்கப்படுவதை நாம் அனுமதிக்க மாட்டோம் என்பதுடன் மோசடிகளை சிறிதளவேனும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
ஐக்கிய இராச்சியத்துக்கான ஒரு நுழைவிசைவை வேண்டும் எவரொருவரும், மோசடியான ஆவணங்களை விற்பதற்கு முன்வரும் அல்லது நுழைவிசைவொன்றைப் பெறுவதற்கு தாங்கள் உத்தரவாதமளிக்க முடியுமெனத் தெரிவிக்கின்ற முகவர்களைச் செவிமடுக்க வேண்டாமென நான் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறேன்.
மோசடிகளைக் கண்டுபிடிப்பதற்கான மிகவும் பயனுறுதியான செயன்முறைகளை நாம் கொண்டுள்ளதுடன் அவ்விதம் செயற்படுவதற்கு எங்களது சர்வதேசப் பங்காளர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகளுடனும் நாம் இணைந்து செயற்படுகின்றோம்.
போலியான வங்கிக் கூற்றறிக்கைகள், கல்வி மற்றும் மொழிச் சான்றிதழ்கள் உட்பட, மோசடிகளைக் கண்டுபிடிக்கும் போது, நாம் நுழைவிசைவை நிராகரிப்பதோடு விண்ணப்பதாரி ஐக்கிய இராச்சியத்தில் பிரயாணிப்பதற்கு ஒரு பத்து வருடத் தடைக்கும், அதேபோல இலங்கை அதிகாரிகளினால் எடுக்கப்படும் சாத்தியமான நடவடிக்கைகளுக்கும் முகங் கொடுப்பார். மோசடிகளில் ஈடுபடும் முகவர்கள் குறித்து நாம் பொலிசில் முறையிடுவோம்´, என்று தெரிவித்தார்.
தங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைப் போலி முகவர்கள் அளிப்பர். விண்ணப்பதாரிகள் இவற்றுக்கு ஏமாறுவதைத் தவிர்ப்பதற்கு, பின்வருவனவற்றை மனதில் கொண்டிருத்தல் வேண்டும்:
• நுழைவிசைவு விண்ணப்பத்தை மேற்கொள்வதற்கு முகவரொருவரை நீங்கள் உபயோகிப்பதற்கான தேவை வேண்டியதில்லை. உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்கள்இ மற்றும் நுழைவிசைவு விண்ணப்பப் படிவம் என்பன ஐக்கிய இராச்சிய எல்லை முகவரமைப்பு மற்றும் ஏகுளு குளோபல் நிறுவனம் என்பவற்றின் பின்வரும் உத்தியோகபூர்வ இணையதள முகவரிகளில் இலவசமாகக் கிடைக்கப்பெறலாம்: www.ukba.homeoffice. gov.uk மற்றும் www.vfs-uk-lk.com.
• ஐக்கிய இராச்சிய எல்லை முகவரமைப்பு இலங்கையில் எந்தவொரு முகவரமைப்புகளையும் வழிமொழியவோ, அல்லது முன்னுரிமை கொண்ட முகவர்களாக எவரையுமோ கொண்டிருக்கவில்லை. முகவரொருவரை நீங்கள் உபயோகிப்பதற்கு விரும்பினால், கவனமாக ஒருவரைத் தேர்ந்தெடுத்து சரியான ஆலோசனைகளைப் பெறவும். நீங்கள் ஏமாற்றப்பட்டால், அதனைப் பொலிசில் முறையிடவும்.
• உங்களது நுழைவிசைவு விண்ணப்பத்துடன் போலியான ஆவணங்ளைச் சமர்ப்பிப்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது என நினைப்பதற்கு போலி முகவர்களால் தவறாக வழி நடாத்தப்படல் வேண்டாம். அவ்விதம் நினைப்பது தவறானதாகும். ஐக்கிய இராச்சிய எல்லை முகவரமைப்பு ஆவணங்களைப் பரிசீலனை செய்வதற்கு மிக நவீன நடைமுறைகளைக் கொண்டுள்ளது. உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும், ஐக்கிய இராச்சியத்தினுள் பிரயாணிப்பதற்கு ஒரு 10 வருடத் தடைக்கும் அத்துடன் இலங்கை அதிகாரிகளினாலான மேலதிக விசாரணைகளுக்கும் நீங்கள் முகங்கொடுப்பீர்கள்.
• உங்களது நுழைவிசைவு விண்ணப்பத்தை முழுமையாகவும் மற்றும் நேர்மையாகவும் பூர்த்தி செய்வது முக்கியமானதாகும். ஐக்கிய இராச்சிய எல்லை முகவரமைப்பு நுழைவிசைவு விண்ணப்பச் செயன்முறையின் ஒரு பகுதியாக உயிரியல் தரவுகளையும் (கைவிரலின் மின்னியல் வருடிப் படங்கள் மற்றும் எண்ணியல் முறைப் புகைப்படங்கள்) சேகரிக்கின்றது. உலகின் வேறெந்தப் பகுதியிலிருந்தும் மற்றும் வேறோர் அடையாளத்தில் ஐக்கிய இராச்சியத்துக்கான நுழைவிசைவுக்கு நீங்கள் விண்ணப்பித்தாலும் எங்களுக்கு அது தெரியும். நுழைவிசைவுச் செயன்முறைகளிலான மோசடிகளைக் கண்டுபிடிக்கவும் மற்றும் எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கும் ஏனைய நாடுகளுடன் ஐக்கிய இராச்சிய எல்லை முகவரமைப்பு நெருக்கமாகச் செயலாற்றுகின்றது.
• விண்ணப்பங்கள் எந்தளவிற்கு விரைவாகச் செயன்முறைப்படுத்தப்படுதல் அல்லது இறுதித் தீர்மானம் என்பவற்றில்இ பணப் பரிமாற்றங்களுடன் செல்வாக்குச் செலுத்த முடியும் எனக் கூறும் முகவர்களை நம்ப வேண்டாம். அவர்களால் அதனைச் செய்யமுடியாது. நுழைவிசைவுக்கான தீர்மானங்கள் ஐக்கிய இராச்சிய எல்லை முகவரமைப்புக்காக கடமையாற்றும் நுழைவிசைவு அதிகாரிகளினால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது.
• ஐக்கிய இராச்சிய எல்லை முகவரமைப்பு அல்லது அதன் வர்த்தகப் பங்காளியான ஏகுளு குளோபல் நிறுவனம் என்பவற்றுடன் தாங்கள் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும்இ தீர்மானத்தின் முடிவு மற்றும் விரைவுபடுத்தல் என்பவற்றில் தாங்கள் செல்வாக்குச் செலுத்த முடியும் எனத் தெரிவிக்கும் முகவர்களை நம்ம வேண்டாம். அவர்களால் அதனைச் செய்வதற்கு முடியாது.
• ஒக்டோபர் 10, 2012 இலிருந்து, நுழைவிசைவுச் செயன்முறைகளின் இறுதியில் உங்களது ஆவணங்களை முகவர்கள் பெற்றுச் செல்வதற்கு இனிமேலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களது ஆவணங்ளைப் பெற்றுக் கொள்வதற்கு எப்பொழுது தயார் என்பதை அறிவதற்கு உங்களது விண்ணப்பத்தின் முன்னேற்றத்தை நீங்களே பின்பற்றி அறிந்து கொள்ள முடியும். உங்களது விண்ணப்பத்தின் முன்னேற்றம் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு தன்னியக்க குறுஞ் செய்தியைப் பெறுவதற்கு சிறியதொரு கட்டணத்தை நீங்கள் செலுத்தலாம். மேலதிக தகவல்களைwww.vfs-uk-lk.com எனும் இணையதள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
• ஐக்கிய இராச்சிய எல்லை முகவரமைப்பு அல்லது கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் என்பவற்றிலிருந்தான உத்தியோகத்தர்களாக தங்களைக் காண்பித்துக் கொள்பவர்களினால் முட்டாளாக வேண்டாம். சட்டப்படியான நுழைவிசைவு அதிகாரிகள் விண்ணப்பதாரிகளை தங்களது அலுவலகத்திற்கு வெளியே சந்திப்பதற்கோ அல்லது பணத்திற்காக உங்களைத் தொடர்பு கொள்ளவோ மாட்டார்கள்.
• உத்தியோகபூர்வ அரசாங்க அல்லது ஏகுளு இணையதளங்கள் போன்று தோன்றுவதற்கு வடிவமைக்கப்பட்ட போலியான இணையதளங்களினால் ஏமாற வேண்டாம். உங்களது நுழைவிசைவு தொடர்பான தகவல்களை எப்பொழுதும்www.ukba.homeoffice.gov.uk மற்றும் www.vfs-uk-lk.com ஆகிய உத்தியோகபூர்வ இணைதளங்களிலிருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.
யாரேனும் ஒருவர் ஐக்கிய இராச்சிய நுழைவிசைவுச் செயன்முறையை துஷ்பிரயோகித்து உள்ளார் அல்லது அவ்விதம் செய்வதற்கு நோக்கம் கொண்டுள்ளார் அல்லது இதனைச் செய்வதற்கு வேறு யாரேனுக்கும் உதவியுள்ளார் எனத் தகவல்களை நீங்கள் கொண்டிருந்தால், தயவுசெய்து பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் ஐக்கிய இராச்சிய எல்லை முகவரமைப்பைத் தொடர்பு கொள்ளவும்:
Ralon.Colombo2@fco.gov.uk சம்பந்தப்பட்ட நபரின் தொடர்பு கொள்ளும் விபரங்கள் உட்பட, இயலுமானளவிற்கு அவர் பற்றி கூடுதலான தகவல்களை வழங்கவும். நீங்கள் வழங்கும் தகவல்களை ஐக்கிய இராச்சிய எல்லை முகவரமைப்பு இரகசியமானதாகப் பேணும் என்பதுடன் உங்களைப் பற்றிய தகவல்களையும் வெளிப்படுத்தாது.

No comments:
Post a Comment