பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திவிநெகும சட்டமூலத்தினால் வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை அப்படியே விழுங்கிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
இந்த சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றில் அறிவிக்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் பாராளுமன்றில் சமர்ப்பிக்க 13ஆவது திருத்தத்தின்படி அனைத்து மாகாண சபைகளிலும் சட்டமூலத்திற்கு அனுமதி பெறப்பட வேண்டும். அதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சியின் கீழுள்ள 7 சபைகளிலும் குறித்த சட்டமூலத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
எனினும் தற்போது அரசினால் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை. இதனால் வடக்கு மாகாண சபையில் மக்களின் பிரதிநிதித்துவம் வெளிப்படுத்தப்பட முடியாதுள்ளதோடு, இந்த சட்டமூலம் குறித்து வடக்கு மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் இணக்கமும் பெறப்பட முடியாதுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி மூலம் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் வடக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவரது விருப்பம் மாத்திரமே இந்த சட்டமூலத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளது. உண்மையில் குறித்த வட மாகாண ஆளுநர் வடக்கு மக்களின் பிரதிநிதி அல்ல. அங்குள்ள மக்களினால் வாக்களித்து தெரிவானவரும் அல்லர். இவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டவர் மாத்திரமே ஆவார்.
நாட்டின் ஏனைய மாகாண சபைகளில் மக்களின் வாக்குகள் மூலம் சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அங்கீகாரம் பெறப்பட்டது. எனினும் வடக்கு மாகாணத்தில் அவ்வாறு இடம்பெறவில்லை. இதன் காரணமாக வடக்கு மாகாண மக்களின் விருப்பு, வெறுப்பு, அங்கீகாரம், ஜனநாயக உரிமைகள் என்பன அரசாங்கத்தினால் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இதனை ஒருபோதும் ஏற்க முடியாது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் திவிநெகும சட்டமூலத்திற்கு வட மாகாண மக்களின் அங்கீகாரம் உள்ளது என்பதனை ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது. இதேவேளை, வடக்கு மாகாண சபை தேர்தலை அரசாங்கம் காலதாமதப்படுத்துவதன் மூலம் அம்மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையே சுட்டிக்காட்டுகிறது.
ஜனாதிபதியால் மட்டும் நியமிக்கப்பட்ட ஆளுநரின் விருப்பம் பெற்று, வட மக்களின் உரிமைகளை அரசாங்கம் பறித்தெடுத்துள்ளது. இது ஜனநாயகத்திற்கெதிரான துரோகம். ஏனைய மாகாணங்களில் மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளும் வடக்கு மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment