குவைத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் மதுபானங்களை விற்பனை செய்துவந்த இலங்கை பெண்ணும் அவரது இந்திய காதலரும் குவைத் காய்டன் பகுதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவர் தொடர்பிலும் பாதுகாப்பு அதிகாரிகள் கூர்ந்து அவதானித்து அவர்களை கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஜின் வகை மதுபானத்தை வேறொரு பிரிவினருக்கு வழங்குவதாக இவ்விருவரும் உறுதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இறக்குமதி செய்யப்பட்ட 79 போத்தல் ஜின் மற்றும் உள்ளூர் கசாயம் என கருதப்படும் மது போத்தல்கள் 212 என்பவற்றை பிரிதொரு தரப்பினருக்கு வழங்க முயற்சித்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருவரும் காதலர்கள் என தெரியவந்த நிலையில், மேலதிக விசாரணைகளுக்கென இவர்கள் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment