Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 10, 2012

மூன்று வெவ்வேறு இடங்களில் மூவர் சடலமாக மீட்பு


நாட்டின் பல பாகங்களிலும் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குருநாகல் வாவியின் பாழடைந்த இடத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு உயிரிழந்த நபர் 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


சடலம் குளியாபிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

களுகங்கை - கெலிடோ கடற்கரைக்கு அருகில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

60 வயதுடைய குறித்த நபரின் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் பெண்ணொருவரின் சடலம் கருவலகஸ்வெவ - பாவட்டாமடு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

கள்ளக் காதலனுடன் இடம்பெற்ற மோதலால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment