Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 12, 2012

நண்பனின் உயிருக்கு எமனான நால்வர் கைது

ராகம தேயிலைத் தோட்ட கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராகம தேயிலைத் தோட்டத்தில் ஆண் ஒருவரின் சடலம் அண்மையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


இச் சம்பவம் தொடர்பிலேயே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபரை காணவில்லை என உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

இதன்படி அந்நபரை தேடிவந்த பொலிஸார் கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் சடலத்தை மீட்டனர்.

உயிரிழந்த சந்தேகநபர் தனது நண்பர்களுடன் ஹோட்டல் ஒன்றிற்குச் சென்று மது அருந்திவிட்டு பின் நண்பர் வீட்டுக்குச் சென்ற வேளை இக்கொலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரிடம் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை பறிக்கவென நண்பர்கள் அவரை கொலை செய்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் தொலைபேசிக்கு வந்த அழைப்பை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment