Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 10, 2012

விண்வெளியில் நின்று கொண்டு பூமியை நோக்கி குதிக்கிறார் பெலிக்ஸ்


பூமிக்கு வெளியில் விண்வெளியில் நின்று கொண்டு பூமியை நோக்கி குதிக்க அவுஸ்திரேலிய பிரஜை பெலிக்ஸ் இன்று புறப்பட தயாராகிறார்.

அவுஸ்திரேலிய Sky diver ஆன பெலிக்ஸ், பாரசூட் மற்றும் கேப்சுல் விண்கலம் மூலம் தரையிலிருந்து 120,000 அடி (22 மைல், 36.5 கி.மீ) உயர வான்பரப்பிற்கு சென்று
அங்கிருந்து பூமியை நோக்கி குதிக்கும் முயற்சிக்கு சமீபகாலமாக கடு
மையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றார்.

இந்த சாகசத்திற்கு ஸ்பான்சராக அவருக்கு Red bull நிறுவனம் உள்ளது. இதற்கான பல நூறுபேர் கொண்ட குழுவினர் பின்னின்று உழைத்துவருவதுடன், பெலிக்ஸ் அவ்வாறு தனது சாகசத்தை புரியும் போது அதை நேரடியாக இணையத்தில் யுரியூப் வழியாக நேரலை ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடாகியிருக்கிறது.

கடந்த 1960ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் Joe Kittinger எனும் அமெரிக்க வான்படை வீரர், தரையிலிருந்து சுமார் 102,800 அடி ( 19.5 மைல்) உயரம் சென்று அங்கிருந்து பூமிக்கே குதித்ததே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது.

அதாவது மனிதன் அதிக உயரத்திலிருந்து குதித்த சாதனை இதுவாகும். அதுவும் யுத்த தேவை கருதியே ஒரு பரிசோதனை முயற்சியாகவே நடைபெற்றதால் உயிராபத்தின் மத்தியில் கட்டாய சூழ்நிலையில் அந்த விமானப்படை வீரர் அவ்வளவு உயரத்திலிருந்து குதித்திருந்தார்.

ஆனால் இத்தேவை அதன் பின்னர் எழவில்லை என்பதாலும், எவரும் சாகசத்திற்காக உயிரை துச்சமாக மதிக்க துணியவில்லை என்பதாலும் இன்றுவரை இச்சாதனை முறியடிக்கப்படவில்லை.
இதையடுத்தே பெலிக்ஸ் இப்புதிய சாதனைக்காக தன்னை தயார் படுத்திவருகிறார்.

நேற்று செவ்வாய்கிழமை வேகமான காற்று திடீரென எங்கிருந்தோ வந்து அவரது பாரசூட் பலூன்களை நிலைகுலைய செய்ததை அடுத்து இம்முயற்சி ஒத்திவைக்கப்பட்டது.

அநேகமாக இன்று புதன்கிழமை அவர் இச்சாதனை முயற்சியை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சாதனையை இவர் நிகழ்த்துவராயின் ஒலியின் வேகத்தை விட அதிவேகமாக பயணம் செய்யும் உலகின் முதல் மனிதன் எனும் புகழும் பெலிக்ஸுக்கு கிடைக்கும்.

காரணம், அவ்வளவு வேகமாக பூமியை நோக்கி அவர் வீழ்வார். அவரது சாகசத்தை இந்த இணைப்புக்களின் ஊடாக நீங்கள் நேரடியாக பார்க்க முடியும்.

No comments:

Post a Comment