Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 10, 2012

ஐ.சி.சியை அவமானத்திலிருந்து காப்பாற்றிய இலங்கை

இலங்கையில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் இலங்கை அணியின் அணித்தலைவராக ஜெயவர்த்தனவிற்கு பதிலாக சங்கக்காரா செயல்பட்டார்.


ஆனால், அரையிறுதிப் போட்டியில் சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தின்(ஐ.சி.சி) கோரிக்கையின் பேரிலேயே மஹேல ஜெயவர்தன மீண்டும் அணித்தலைவராகக் செயல்பட்டது தெரியவந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த ஊடகம் ஒன்றின் தகவலின் படி சர்வதேசக் கிரிக்கெட் வாரியம் இலங்கைக் கிரிக்கெட் அணியிடம் கோரிக்கை விடுத்ததன் காரணமாகவே அரையிறுதிப் போட்டியில் மஹேல ஜெயவர்தன அணித்தலைவராகச் செயற்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நடந்து முடிந்த டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயற்பட்டு இறுதிச்சுற்று வரை முன்னேறிய போதும் மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான சூப்பர்-8 போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீச வில்லை என்று அணிக்கும், அணித்தலைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து மற்றொரு முறை அபராதம் விதித்தால் ஐ.சி.சியின் விதியின் படி அணித்தலைவர் அடுத்த போட்டியில் பங்கேற்க முடியாது.

எனவே இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் அணித்தலைவராக செயற்பட்ட சங்கக்காரா அரையிறுதிப்போட்டியிலும் அணித்தலைவராக தொடர முடிவெடுத்திருந்தார்.

ஆனால், இது சர்வதேச கிரிக்கெட் வாரியத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்பதால் ஜெயவர்த்தனவை அணித்தலைவராக தொடரும் படி ஐ.சி.சி கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை அணி மைதானத்தில் குறித்த ஓவர்களை குறித்த நேரத்திற்குள் வீசுவதற்கு முயன்றாலே போதுமானது என்றும் முன்னைய போட்டிகள் போன்று அதிகக் கடுமையான நடைமுறை பின்பற்றப்பட்டு அணித்தலைவருக்கும், வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படாது எனவும் சர்வதேசக் கிரிக்கெட் வாரியம் உறுதியளித்திருந்ததாகத் கூறப்படுகிறது

No comments:

Post a Comment