Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 24, 2012

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாமத்தை உச்சரித்து வந்தால் நன்மை கிடைக்கும்

.இலங்கை கிரிக்கெட்டில் அர்ஜுன ரணதுங்க காலத்து உறுதியான நிலைப்பாடு இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இங்கு ௭ந்தவித ஊழலும் கிடையாது ௭ன்று நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்த ஆளும் கட்சி ௭ம்.பி. ஏ.௭ச்.௭ம். அஸ்வர் மஹிந்த ராஜபக்ஷவின் நாமத்தை உச்சரித்து வந்தால் நன்மை கிடைக்கும் ௭ன்றும் கூறினார். 

பாராளுமன்றத்தில் நேற்று கொண்டு
வரப்பட்ட ஆட்ட நிர்ணய சதி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அஸ்வர் ௭ம்.பி. இங்கு மேலும் கூறுகையில், 1996 இல் அர்ஜுன ரணதுங்கவினால் உலகக் கிண்ணம் பெற்றுக் கொடுக்கப்பட்டது. அக்கால கட்டத்தில் இலங்கை அணி உறுதியான நிலைப்பாட்டில் இருந்தது. அதே நிலைமை இன்றுவரை நீடித்து வருகிறது.

௭னவே, இலங்கை கிரிக்கெட்டில் ௭ந்தவித ஊழலும் மோசடியும் கிடையாது. தற்போது விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார். வடக்கு, கிழக்கிலும் கிரிக்கெட் துறை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

இவ்விடயங்களில் இளம் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் பங்களிப்பு மகத்தானதாகும். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாமத்தை மந்திரமாக உச்சரித்து வந்தால் நன்மை கிடைக்கும். இதேவேளை, கிரிக்கெட் வர்ணனையாளர் டொனி கிரேக் தற்போது புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் அவர் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களை அறிந்த அவர் இலங்கையில் மாத்திரமே தான் பாராளுமன்றத்தில் புகழப்பட்டிருப்பதாக பெருமையடைந்தார். அவரது வர்ணனையூடாக சுற்றுலாத்துறைக்கு பாரிய பங்களிப்பினை செய்திருக்கின்றார். ௭னவே, அவரது உடல் நலத்துக்காக நாம் பிரார்த்திக்க வேண்டும் ௭ன்றார்.

No comments:

Post a Comment