பாகிஸ்தானில், தலீபான்களை விமர்சித்து வந்த 14 வயது பள்ளிக்கூட மாணவி மாலலா யூசுப்சை ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சுட்டவர்கள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என்றும், அவர்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும்
கைபர்-பக்துன்ஹவா மாநில தகவல் தொடர்பு மந்திரி மியான் இப்திகார் ஹுசைன் இன்று அறிவித்தார்.
பாகிஸ்தானில்

சுடப்பட்ட பள்ளி மாணவியின் முதுகெலும்பு அருகே பாய்ந்த குண்டை மருத்துவர்கள் குழுவினர் 3 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் புதன்கிழமை அகற்றினர்.
இஸ்லாமாபாத்தில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியான மலாலா யூசுப்சாய் (14), தலீபான்களை விமர்சித்து எதிராகப் பேசி வந்தார். இவருக்கு அமைதிக்கான தேசிய விருதை வழங்கி அந்த நாட்டு அரசு கௌரவித்துள்ளது.
இந்த நிலையில், பள்ளி பஸ்ஸில் செவ்வாய்க்கிழமை வந்தபோது அந்த மாணவியை, தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் சிறுமியின் தலையில் ஒரு குண்டும், முதுகெலும்பு அருகிலும் ஒரு குண்டும் பாய்ந்தது.
படுகாயமடைந்த அவர், பெஷாவரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு லேடி ரீடிங் மருத்துவமனையின் நரம்பியல் துறை தலைமை மருத்துவர் மம்தாஷ் கான் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இதுபற்றி கான் கூறுகையில், “மலாலா மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என நம்புவதாகத்’ தெரிவித்தார்.
அவரது தலையில் வீக்கத்தை குறைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இருந்தாலும், அறுவை சிகிச்சையின்போது அதிகமாக ரத்தம் வெளியேறியதாகவும், அதனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலாலாவின் மாமா அகமது ஷா கூறுகையில், “மலாலாவின் உடலில் பாய்ந்திருந்த குண்டுகள் அகற்றப்பட்டுள்ளன. இருந்தாலும், அவளை வெளிநாடுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இதற்கு அவளது உடல்நிலை ஒத்துழைப்பது சிரமம் என்றும், இன்னும் 10 நாள்களுக்கு அவரது நிலைமை குறித்து எதுவும் கூறமுடியாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார் அகமது ஷா.
மருத்துவ சிகிச்சைக்காக மலாலாவை எந்நேரமும் துபாய்க்கு கொண்டு செல்ல மருத்துவமனையில் விமான ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் இக்ஷானுல்லா இக்ஸôன் கூறுகையில், “மாணவி மீது தாக்குதல் நடத்தியது நாங்கள்தான்.
தலிபான்களுக்கு எதிராக மலாலா தொடர்ந்து பேசி வந்தார். அதனால்தான் தாக்குதல் நடத்தினோம். அவர் உயிர் பிழைத்தாலும் மீண்டும் தாக்குவோம்’ என்றார் இக்ஸான்.

No comments:
Post a Comment