சிரியாவில் அதிபர் பதவி விலக வற்புறுத்தி ஒன்றரை ஆண்டுகளாக மக்களும், புரட்சி படையினரும் போராடி வருகின்றனர். அவர்கள்மீது அதிபர் ராணுவத்தை ஏவி விட்டு ஒடுக்க முயற்சித்து வருகிறார். ஆனால் இதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை. நாளுக்கு நாள் புரட்சிபடையின் கை ஓங்கி வருகிறது.
பல இடங்களில் ராணுவத்தை புரட்சி படையினர் விரட்டியடித்து வருகின்றனர். இந்த நிலையில் வட மேற்கு பகுதியில் உள்ள இதலிப் என்ற இடத்தில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை புரட்சி படையினர் சுட்டு வீழ்த்தினார்கள். 10 நாட்களுக்கு முன்பும் ஒரு ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது. இப்போது 2-வது ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.
ஹெலிகாப்டர் தீப்பிடித்து விழுவதை வீடியோ படம் பிடித்து புரட்சி படையினர் வெளியிட்டு உள்ளனர். இதற்கிடையே சிரியா தந்காலிக போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அரசு செய்தி தொடர்பாளர் ஜிகாத் அல் மாக்திஸ்து கூறும்போது எதிர் தரப்பினரும் முன்வந்தால் நாங்கள் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய தயாராக இருக்கிறோம்.
மேலும் புரட்சி படையினர் நிபந்தனை எதுவும் விதிக்காவிட்டால் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்றார்.

No comments:
Post a Comment