Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, October 11, 2012

சபையில் ஹிஸ்புல்லாஹ் ஆழ்ந்த நித்திரை

பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட இலங்கை விமான விபத்துக்களை தடுப்பதற்கான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் அழைக்கப்பட்டபோது அவர் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.


சபைக்குத் தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகும
ாரினால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் இரண்டு தடவை அழைக்கப்பட்டபோதும் அவர் எழுந்திருக்காததை அவதானித்த சபை ஊழியர் ஒருவர் ஓடிவந்து பிரதியமைச்சரை தட்டி எழுப்பினார்.

இதனையடுத்து திடுக்கிட்டு எழுந்த பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தன்னை சுதாகரித்துக்கொண்டதுடன் சில விநாடிகள் அமர்ந்திருந்தவாறே பாதணிகளை அணிந்துகொண்டு எழுந்து உரையாற்ற ஆரம்பித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி பிரேரணை மீது ஜனநாயக தேசிய கூட்டணி எம்.பி.யான அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியதன் பின்னர் ஆளும் கட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட நேரத்திலேயே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment