Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, October 25, 2012

பொடுபோக்குத்தனமாக நடக்கும் நிருவாக உத்தியோகத்தர்களை இடமாற்றவேண்டும் ,எஸ்.எல்.முனாஸ்


நிருவாகம் என்பது மக்களின் தேவைக்கே தவிர நிருவாகத்தின் தேவைக்கு மக்கள் இல்லை அப்படி மக்களை மாற்ற நினைப்பது எந்தளவு முட்டாள்தனமானது என்பது அனைவருக்கும் தெரிந்த விடையம், இன்று எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் மக்களின் தேவைக்கும், சேவைக்கும்தான் உத்தியோகத்தர்கள்
நியமிக்கப்படுகிறார்கள் அதனை கருத்தில் கொள்ளாது தான் அரசதுறை உத்தியோகத்தர் என்னைப் பிடிக்க யாராலும் முடியாது நான் நினைப்பதுதான் சட்டம் நான் விரும்பிய முறைப்படிதான் கடமைகளைச்செய்வேன் என்று தனது பணிகளைசெய்யமுடியாது.
இன்று அட்டாளைச்சேனைப் பிரதேசசபை அமர்வு தவிசாளர் எம்.ஏ.அன்சில் தலமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றபோதே முனாஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்

இந்த அட்டாளைச்சேனைப் பிரதேசசபையில் மக்களின் வாக்குகளைப்பெற்று ஒரு உறுப்பினராக நானும் இங்கு வந்துள்ளேன் ஆனால் நானும் எனது வேலையும் என்று இருக்க என்னால் முடியாது வாக்களித்த மக்களுக்கு என்னைப்போன்ற அனைத்து மக்கள் பிரதி நிதிகளும் சரியான பதில்களைச்சொல்லியே ஆகவேண்டும் சபையில் என்ன நடைபெறுகிறது என்று தெரியாமல் ஒவ்வொரு மாத அமர்வுகளிலும் வந்து இருந்து இங்கு இடம்பெறும் செலவுகளுக்கு கையப்பம் வைத்துவிட்டு வீட்டுக்குச்செல்லும் உறுப்பினராக மட்டுமில்லாது இங்கு நடைபெறும் குறைநிறைகளை சரியாக ஆராயும் ஒருவனாகவும் நான் இந்த சபையில் உறுதியாகவும் கவனமாகவும் இருப்பேன்.

கடந்த பலவருடங்களாக இந்த சபையில் இருக்கும் சில உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் விடையத்தில் நிதானம் இல்லாது தூர இடங்களில் இருந்துவரும் பெண்கள் வயதானவர்கள் அனைவரையும் அலக்களிப்பதாகவும் சரியான நேரத்துக்கு சரியான வேலைகளை முடித்து தருவதில்லை என்றும் பல புகார்கள் என்னிடம் வந்த வன்னம் உள்ளன பள்ளிக்குச்சென்றால் அங்கே முறைப்பாடு மரண வீடுகள், திருமண மற்றும் முக்கிய நிகழ்வுகள் எங்கு சென்றாலும் எங்கெல்லாம் மக்கள் கண்டாலும் அது அப்படி இது இப்படி என்று முறைப்பாடு சொல்கின்றனர் இதுக்கெல்லாம் காரணம் என்ன வென்றால் உத்தியோகத்தர்களின் அசமந்தப்போக்கு  எனவே பொதுமக்கள் விடையத்தில் சரியாக இயங்காத எந்த உத்தியோகத்தரையும் அட்டாளைச்சேனை பிரதேசசபையில் இருந்து மாற்றுவதற்கு கௌரவ தவிசாளர் சரியான முடிவு எடுக்க வில்லையென்றால் மக்களை சபைக்கு முன்னால் நிறுத்தி போராட்டம் பன்னி இப்படியானவர்களை இந்த சபையை விட்டு அனுப்ப தயங்க மாட்டேன் என்பதனை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். 

உதாரணமாக இந்த சபையில் தொழிற்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் அது சம்மந்தப்பட்ட சிலரின் பொடுபோக்கையும் மோசமான செயலையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் நெல்சிப் என்னும் திட்டத்தின் மூலமாக ஊரில் பல பகுதிகளில் பாதை வடிகான் என்று வேலைகள் நடைபெருகிறது ஆனால் அந்த வேலை சம்மந்தமாக கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் ஊரில் போடப்பட்டுள்ள ஒரு வடிகான் அதனை சிறந்த முறையில் அந்த வேலையைப்பொறுப்பெடுத்த சனசமூக நிலையம் முடித்து ஐந்து மாதங்களாகியும் அவர்களின் வேலைக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை இதன் காரணம் என்ன இந்த வேலையினை செய்தவர்களின் நிலை என்ன இதுவரை அவர்கள் எத்தனை முறை பிரதேசசபைக்கு வந்து அலைந்து சென்றுள்ளார்கள் இதனை சபையின் தவிசாளர் உறுப்பினர்கள் தட்டிக்கேட்க வில்லை என்றால் இந்த ஊரில் என்ன அநியாயம் நடந்தாலும் சும்மா பார்த்திட்டு இருக்கும் ஒரு கூட்டமாகவே நாம் இருக்க நேரிடும் எனவே சரியான நேரத்துக்கு சரியான தீர்மானம் எடுக்க வேண்டும் உடனடியாக இது சம்மந்தமாக உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் உதவி ஆணையாளர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.



No comments:

Post a Comment