Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, October 25, 2012

இருபது இலட்சத்தைத் தாண்டிய ஹாஜிகள் அரபாவில்…

உலக நாட்களில் சிறந்த நாளான இன்றைய அரபா நாளில் இருபது இலட்சத்தைதாண்டிய ஹாஜிகள் அரபா மைதானத்தில் தற்பொழுது தரித்து இருக்கின்றனர்.

189 நாடுகளின் 1,752,932 வெளிநாட்டு ஹாஜிகள் அரபாவில் தரிக்கின்றனர்.
இவர்களுள் 951,806 ஆண்களும் 801,126 பெண்களும் அடங்குகின்றனர். இதைவிட உள்ளுர் ஹாஜிகளும் வழமைபோல் ஹஜ்ஜில் ஈடுபடுகின்றனர்.ஆயிரக்கணக்காக பஸ் வண்டிகளிலும் நடைகளிலும
், ஒட்டகங்களிலும், எனைய மிருகங்களிலும் மற்றும் வாகனங்களிலும் ‘லப்பைக் அல்லாஹூம்ம லப்பைக்’ எனும் தல்பியாவுடன் மக்கள் அரபாவில் வந்து சேர்ந்தவன்னமிருக்கின்றனர்.

இன்று வியாழக்கிழமை மாலையில் மழை வரும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக சவூதி அரேபியாவின் ஹஜ் ஏற்பாட்டுக் குழு அறிவித்திருக்கின்றது. 19 அவசர விமான சேவைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட அவசர சேவை மற்றும் தீ எதிர்ப்பு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. 21 சுரங்கங்களும் நவீன பாதுகாப்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் மினா-முஸ்தலிபா-அரபா ஆகிய எல்லைகளுக்குட்பட்ட 4 சிரேஷ்ட மருத்துவமணைகளும், 46 உள்ளுர் மருத்துவ நிலையங்களும் அதிநவீன சேவைகளுக்காக தயார்படுத்தப்பட்டிருப்பதாகவும், சவூதி அரேபியாவின் செம்பிறை சங்கத்தினர் 24 மணித்தியாலங்களும் துரிதமாக ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

தேசிய நீர்வழங்கள் சபையினால் 6 இலட்சம் கொள்கலன்கள் நீர் ஹாஜிகளுக்காக தினமும் பக்கட் மூலமாக இலவசமாக வழங்கப்பட்ட வருகின்றன.

இதற்கிடையில் நாளை காலை மினாவில் கல் எரியும் நிகழ்வுக்கு மேலதிகமாக பாதுகாப்பும், அவசர சேவைகளும் துரிதமாக ஈடுபடுத்தப்படவிருப்பதாகவும் ஹஜ் கொமிட்டி அறிவித்திருக்கின்றது.

No comments:

Post a Comment