எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேசிய சுதந்திர முன்னணி தலைவர், அமைச்சர் விமல் வீரவன்சவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
13வது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் இன்று (10) காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13வது திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என விமல் வீரவன்ச அணி கூறிவரும் நிலையில், 13ம் திருத்தத்தை அகற்றுவதில் தமது எதிர்ப்பு இல்லை என்ற போதும் அதற்காக வேறு தீர்வு இருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் 13ம் திருத்தம் குறித்து எதிர்வரும் கட்சி மாநாட்டில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment