கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்த 27 பேரில் ஒருவர் வெளிநாட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் பெயர் விபரங்கள் வெளியாகாத நிலையில் அவர் மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பிரஜை என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் எம்.எஸ்.சதீஸ்குமார் தெரிவித்தார்.
குறித்த மலேசிய பிரஜை போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வந்தவர் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, உயிரிழந்த 27 கைதிகளில் 2 அல்லது 3 தமிழ் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 43 பேரில் ஐவரின் நிலை கவலைக்கிடம் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment