அக்கரைப்பற்று நீதிமன்ற சிறைக்கூடத்தில் இருந்து கைதியொருவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தப்பியோடியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு தப்பி ஓடியவர் அக்கரைப்பற்று ஆறாம் பிரிவு முஸ்லிம் மகாவித்தியாலய வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய மஹமது தம்பி இம்தியாஸ் என்பவராவார். சம்மாந்துறை - அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆயர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த நிலையில் 7 தனித்தனி வழக்குகளுக்கு நீதிமன்றங்களுக்கு ஆயராகாமல் தலைமறைவாகிவந்துள்ள நிலையில், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந் நிலையில் வியாழக்கிழமை அக்கரைப்பற்று பொலிஸார் இவரை கைது செய்து நேற்று காலை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.சரவணராஜா முன்னிலையில் ஆயர்படுத்தியபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இவரை நீதிமன்ற சிறைக் கூடத்தில் அடைக்கப்பட்டிந்த நிலையில் சம்பவதினமான நேற்று மாலை 3.45 மணிக்கு சிறைக்கூடத்தில் இருந்து கைதி தப்பி ஓடியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment