Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, November 09, 2012

2012ல் உலகம் அழியாது - பீதி தேவையில்லை : ருங்கேரி பீடாதிபதி

2012ல் உலகம் அழியாது எனவே பொதுமக்கள் யாரும் பீதி அடைய தேவை இல்லை.உலகம் அழியும் என்று வதந்தி பரப்புவதை சில மதத்தினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என சிருங்கேரி பீடாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். 


இந்திய பீடாதிபதிகளுள் சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதிதீர்த்த மகாசுவாமி ஒருவர். உலகம் முழுவதிலும் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார். அவர் ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் உள்ள வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

வெளியே வந்த அவரிடம் நிருபர்கள் சூழ்ந்து கொண்டு 2012-ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்களே? என்றனர்.இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது: 2012-ம் ஆண்டு உலகம் அழிந்து வரும் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் பொது மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்து மத சாஸ்திரப்படி 2012-ல் உலகம் ஒருபோதும் அழியாது.இந்த உலகம் அழிய இன்னும் பல ஆயிரம் வருடங்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் யாரும் பீதி அடைய தேவை இல்லை. சில மதத்தினர் உலகம் அழியும் என்று வதந்தி பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இப்படி வதந்தி பரப்புபவர்களை யாரும் நம்ப மாட்டார்கள். பெரும்பாலான கோவில்களில் ஏழைஇபணக்காரன் வித்தியாசம் பார்க்கப்படுகிறது. இதனை கோவில் நிர்வாகிகளும்இ ஊழியர்களும் கைவிட வேண்டும்.

கடவுள் முன்பு அனைவரும் சமம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.காளகஸ்தி கோவிலை தெற்கு காசி என்றே கூறலாம். இங்கு ஒரு தடவை வந்து வழிபட்டால் போதும் முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கும்இவ்வாறு அவர் கூறினார்.

புதிய உலகம்.

No comments:

Post a Comment