Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, November 09, 2012

கிழக்கில் தேடப்பட்டுவந்த முன்னாள் புலி உறுப்பினர் கைது

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பகிரங்க பிடியாணை பிறக்கப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 10 மாதங்களாக தலைமறைவாகியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். 


பால்குடியன் அல்லது கிளியரசன் என்ற இயக்கப் பெயரைக்கொண்ட குமாரசாமி லிங்கேஸ்வரன் என்ற முன்னாள் புலி உறுப்பினரே இவ்வாறு பொலிஸாரின் சுற்றிவளைப்பின் போது நொச்சிமுனை ஆறாம்குறிச்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். 

ஆறுக்கும் அதிகமான கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. 

அதற்கு முன்னரும் மூன்று வீடு உடைப்பு சம்வங்கள் தொடர்பாக இவர் தேடப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேற்படி நபரினால் கொள்ளையிடப்பட்ட ஒன்றரை பவுண் தங்க மாலை, பெண்கள் துவிச்சக்கரவண்டி, இரண்டு சைக்கிள், கையடக்க தொலைபேசிகள், வீட்டுத்தளபாடங்கள் அடங்கலாக பெருமளவு பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

சந்தேகநபர் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment