Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, November 09, 2012

கோவப்படாதீர்கள் காயம் ஆறாது ; ஆய்வில் தகவல்

சர்க்கரை நோயாளிகளுக்கு தான், காயம் ஆறாது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்; "முணுக்"கென கோபப்படுவோருக்கும் , "உடலில் பட்ட காயம் ஆற தாமதம் ஆகும்' என்று ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள் ளது. அமெரிக்காவில் உள்ள ஒ
கியோ பல்கலை., மருத்து நிபுணர்கள், இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களின் ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்க்கரை நோயாளிகளுக்கு, உடலில் ஏற்பட்ட காயம் ஆறுவதற்கு மிகவும் தாமதம் ஆகும் என்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோபம், எரிச்சல் படுவோருக்கும், காயம் ஆற தாமதம் ஆகும் என்று நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். ஆத்திரப்படுவதால், உடலில் உள்ள, "ஸ்ட்ரெஸ்' சுரப்பியான "கார்டிசோல்' அதிகமாகச் சுரக்கிறது.
 
அப்படி சுரக்கும் போது, காயம் ஆறுவது தாமதமாகிறது. கோபப்படாமல், அமைதியாக உள்ளவர்களுக்கு , அவர்கள் உடலில் ஏற்பட்ட காயம் சுலபமாக ஆறிவிடுகிறது. அவர்களுக்கு, "கார்டிசோல்' சுரப்பது குறைவாக உள்ளது தான் இதற்கு காரணம். அமைதியான சுபாவம் உள்ளவர்களைக் காட்டிலும், கோப்படுவோருக்கு காயம் ஆறுவது நான்கு மடங்கு தாமதம் ஆவது, நாங்கள் நடத்திய சர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, கோபத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது

No comments:

Post a Comment