Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, November 09, 2012

இந்திய வம்சாவளி முஸ்லிம் பெண்ணுக்கு பிரிட்டனில் சிலை திறப்பு

இந்​திய வம்​சா​வ​ளி​யைச் சேர்ந்​த​வ​ரும்,​​ "உள​வாளி இள​வ​ரசி´ என அழைக்​கப்​பட்​ட​வ​ரு​மான நூர் இனா​யத் கானுக்கு பிரிட்​ட​னில் மார்​ப​ளவு வெண்​க​லச்​சிலை வியா​ழக்​கி​ழமை திறந்து வைக்​கப்​பட்​டது.​ 


இரண்​டாம் உல​கப் போரின் போது,​​ பிரான்​ஸில் தங்கி பிரிட்​ட​னுக்​காக உளவு பார்த்து வந்​தார் நூர் இனா​யத் கான்.​ ​ 

பிரான்​ஸில் பிரிட்​ட​னின் உள​வுக் கட்​ட​மைப்பு சிதைந்த போது,​​ அவ​ரது அதி​கா​ரி​கள் அவரை பிரிட்​டன் திரும்ப வற்​பு​றுத்​தி​னர்.​ இருப்​பி​னும் பிரான்ஸ் தோழர்​களை தனியே தவிக்​க​விட விரும்​பாத நூர்,​​ தனி ஆளாக உள​வ​றிந்து வந்​தார்.​ 

பின்​னர்,​​ ஜெர்​மனி உள​வா​ளி​க​ளி​டம் பிடி​பட்டு,​​ 1944ஆம் ஆண்டு தன் 30ஆவது வய​தில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார்.​ ​ 

திப்பு சுல்​தா​னின் கொள்​ளுப் பேரன் இனா​யத்​கா​னின் மக​ளான நூர்,​​ தன் சிறு வய​தில் பிரிட்​ட​னில் கார்​டோன் ஸ்கொ​யர் என்ற இடத்​தில் தங்​கி​யி​ருந்​தார்.​ அந்த இடத்​துக்கு அரு​கில்,​​ நூர் இனா​யத்​கா​னின் மார்​ப​ளவு வெண்​க​லச் சிலையை,​​ 2ஆம் எலி​பெ​ஸத் ராணி​யின் மக​ளான இள​வ​ரசி ஆனி திறந்து வைத்​தார்.​ 

"இந்த மாபெ​ரும் தியா​கத்தை மக்​கள் மறந்து விடக்​கூ​டாது.​ தன் வீரத்​துக்​காக அவர் மிகப் பெரும் விலை​யைக் கொடுத்​துள்​ளார்´ என ஆனி தெரி​வித்​தார்.​ ​ ​ 

முஸ்​லிம் இனத்​த​வர் மற்​றும் ஆசி​யா​வைச் சேர்ந்த பெண்​ம​ணிக்கு இது போன்ற கௌ​ர​வம் பிரிட்​ட​னில் அளிக்​கப்​ப​டு​வது இதுவே முதல் முறை.​ 

10 மாத கடும் சித்​ர​வ​தைக்​குப் பிற​கும்,​​ நூரி​டம் இருந்து உண்மை எதை​யும் ஜெர்​மன் உள​வா​ளி​க​ளால் வர​வ​ழைக்க முடி​ய​வில்லை.​ இத​னைக் கௌ​ர​விக்​கும் வித​மாக,​​ நூரின் இறப்​புக்​குப் பின்,​​ பிரிட்​ட​னின் உய​ரிய விரு​து​க​ளுள் ஒன்​றான​ "ஜார்ஜ் கிராஸ்´ விருது வழங்​கப்​பட்​டது குறிப்​பி​டத்​தக்​கது.​ 

நூர் இனா​யத் கான் நினைவு அறக்​கட்​ட​ளை​யின் தலை​வர் சர​பாணி ​ நூரின் வாழ்க்கை வர​லாற்றை எழு​தி​யுள்​ளார்.​ கடந்த சில ஆண்டுகளாக,​​ நூர் பற்​றிய பிர​சார இயக்​கத்​தை​யும் நடத்தி வந்​தார்.​ 

இந்த பிர​சா​ரத்​துக்கு,​​ பிரிட்​டன் பிர​த​மர் கேம​ரூன்,​​ திரைப்​பட இயக்​கு​நர் குரிந்​தர் சதா,​​ நாட​கக் கலை​ஞர் நினா வாடியா,​​ சிதார் இசைக்​க​லை​ஞர் அனுஷ்கா சங்​கர் மற்​றும் எம்.பி.க்கள் உள்​ளிட்ட பிர​ப​லங்​கள் ஆத​ரவு தெரி​வித்​தது குறிப்​பி​டத்​தக்​கது.​ ​ 

தான் இந்​தி​யப் பாரம்​ப​ரி​யத்​தைச் சேர்ந்​த​வர் என்​ப​தில் நூர் மிக​வும் பெரு​மி​தம் கொண்​டி​ருந்​தார் என்று பாஸய் தெரி​வித்​துள்​ளார்.​ 

No comments:

Post a Comment